சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியே மிக முக்கியம்

 🙏🏻ஆண்டாண்டுகளாய் அனுபவங்களை கண்டு.. மனமது.. பலமாகி போனாலும்.. ஒரு பக்கம் நம் வயதும் ஏறி.. முதுமை பட்டியலில்..listing ஆகிவிடுகிறோம்... வெளியுலகில்.. நம் பங்களிப்பு கம்மி தான்..ஆனால் நம் குடும்பத்தில் ..நாமே முதன்மை படுத்தப்படுகிறோம்..இங்கு தான் நமது கல்வியறிவு+அனுபவங்கள் அனைத்தும் நமக்கு உதவி புரிய வேண்டும்..

1. வயது கூடக்கூட.. ஆசைகளை.. நமக்குள் அடக்க கற்று கொள்ள வேண்டும்.. புரியவில்லையா?..உதாரணமாக.. கல்யாணம் ஆகிவிட்ட மகள் தன் கணவனுடன் மற்றும் மாமனார், மாமியாருடன்  வெளி செல்லும்போது..நம்மை ஒதுக்குவது போல..நினைத்து வேதனை அல்லது வெறுப்பு கொள்ள கூடாது.. மாறாக.. அப்பா..நம் மகளுக்கு..புது உறவுகள் மூலம், நம்மை மறக்கும் தன்மை வந்துவிட்டது.. என்று மனம் தேற்றி கொள்ள வேண்டும்...(இதே நிலைமை.. உங்கள் மகன் ..அவர் மனைவி வீட்டாருடன் செல்லும்போது.. என் மகனுக்கு, நம்மோடு சேர்ந்து இன்னும் சில நல்ல உறவுகள்.. அவன் மனதிற்கு பிடித்தாற்போல.. அமைந்திருக்கிறது.. என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும்...)..ஆனால் மேற்கண்ட விஷயங்கள் ..நமது பிள்ளைகள் பொறுப்பானவர்களாக இருந்தால் மட்டுமே.. நமது அதிர்ஷ்டம்... எடுப்பார் கைபிள்ளைகளாக நமது குழந்தைகள் இருப்பார்களானால்.. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்... நமக்குள் நாம் மிக அதிகமாகவே.. சகிப்புத்தன்மை வளர்த்து கொள்ள வேண்டும்..எதிர்பார்ப்புகள் நமக்குள் இருக்கவே கூடாது.. நமக்குள் சில பொழுதுபோக்கு அம்சங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.. நம்மை சுற்றி எது நடந்தாலும்.. அதை பார்த்து நாம் சலனம் அடைய கூடாது(வேதனையும் கொள்ள கூடாது/ சந்தோஷமும் கொள்ள கூடாது.. neutral state of mind..நிதர்சன நிலையில் மனம் இருக்க வேண்டும்.)..

வயது ஏற ஏற.. நாம் இந்த மன நிலையில் இருந்தோமென்றால்.. அல்லது வளர்த்து கொண்டோமென்றால்..நாமும் நலமுடன் இருப்போம்..நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்..!!

Comments

Popular posts from this blog

விட்டு கொடுத்தலே.. நிஜமான வெற்றி!💐💐💐

சிவ புண்ணியம்.. செய்ய.. வாழ்க்கை சிறக்கும்.

சிந்திக்க வேண்டிய விஷயங்கள் -1 (21-10-24 வாட்சப் பகிர்வு)