Posts

Showing posts from February, 2021

தை அமாவாசை.. சிறப்பு அம்சங்கள்

டெலிக்ராம்.. செயலியில் வந்த பகிர்வு.. உங்கள் நலனுக்காக... #எல்லோரையும்_வாழ்விக்கும்_தை_அமாவாசை_வழிபாடு! நன்றி:  வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள் & ராகேஷ் பெ காலம் காலமாய்  நம் வாழ்வு செழித்திருக்க தெய்வப் பலமும் முன்னோர் ஆசியும் அவசியம் தேவை. இந்தப் பேறுகளைப் பெற, அவசியமான சில வழிபாடு களைச் செய்யச் (இறையருள்) சொல்கின்றன நம் ஞான நூல்கள். அவற்றில் ஒன்றுதான்  #தை_அமாவாசை. வருடத்தில் மூன்று அமாவாசை தினங்கள் முக்கியத் துவம் பெறும். அவற்றில் ஒன்று #உத்தராயனப்_புண்ணிய_காலத்_தொடக்கமான_தைமாதத்தில்_வரும்_அமாவாசை. மகத்துவம் நிறைந்த இந்த நாளில் செய்ய வேண்டிய முன்னோர் வழிபாட்டின் அவசியங்கள் குறித்து ஞான நூல்கள் விளக்குகின்றன. ஓர் ஆண்டில் 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். குறைந்தபட்சம் ஆண்டுக்கு மூன்று முறையாவது நம் முன்னோரை உரிய காலத்தில் வழிபட வேண்டியது அவசியம். அவ்வாறு செய்வது நமக்கு நன்மை பயக்கும். புனிதமான இந்தத் தர்ப்பணங்களைச் செய்யாமல் இருந்தால், குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, எதிர்மறை எண்ணங்கள், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டு நிம்மதி யைக் குலைத்த...

சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியே மிக முக்கியம்

 🙏🏻ஆண்டாண்டுகளாய் அனுபவங்களை கண்டு.. மனமது.. பலமாகி போனாலும்.. ஒரு பக்கம் நம் வயதும் ஏறி.. முதுமை பட்டியலில்..listing ஆகிவிடுகிறோம்... வெளியுலகில்.. நம் பங்களிப்பு கம்மி தான்..ஆனால் நம் குடும்பத்தில் ..நாமே முதன்மை படுத்தப்படுகிறோம்..இங்கு தான் நமது கல்வியறிவு+அனுபவங்கள் அனைத்தும் நமக்கு உதவி புரிய வேண்டும்.. 1. வயது கூடக்கூட.. ஆசைகளை.. நமக்குள் அடக்க கற்று கொள்ள வேண்டும்.. புரியவில்லையா?..உதாரணமாக.. கல்யாணம் ஆகிவிட்ட மகள் தன் கணவனுடன் மற்றும் மாமனார், மாமியாருடன்  வெளி செல்லும்போது..நம்மை ஒதுக்குவது போல..நினைத்து வேதனை அல்லது வெறுப்பு கொள்ள கூடாது.. மாறாக.. அப்பா..நம் மகளுக்கு..புது உறவுகள் மூலம், நம்மை மறக்கும் தன்மை வந்துவிட்டது.. என்று மனம் தேற்றி கொள்ள வேண்டும்...(இதே நிலைமை.. உங்கள் மகன் ..அவர் மனைவி வீட்டாருடன் செல்லும்போது.. என் மகனுக்கு, நம்மோடு சேர்ந்து இன்னும் சில நல்ல உறவுகள்.. அவன் மனதிற்கு பிடித்தாற்போல.. அமைந்திருக்கிறது.. என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும்...)..ஆனால் மேற்கண்ட விஷயங்கள் ..நமது பிள்ளைகள் பொறுப்பானவர்களாக இருந்தால் மட்டுமே.. நமது அதிர்ஷ்டம்... ...

PC யின்.. அருமை மிகு telegram பதிவுகள்.💐.

 Padmavathi Chairmadurai: திருச்சிற்றம்பலம் தை அமாவாசை அன்றுஅபிராமி அந்தாதி படியுங்கள் பாடுங்கள் திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடுகள் நடத்திவந்த அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க அய்யருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் பிறந்தார். பின்னாளில் அவர்தான் அபிராமி பட்டராக மாறினார். அமிர்தலிங்க அய்யர் தம் மகன் அபிராமி பட்டருக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரையான தேவி உபாசனையும் அறியச் செய்தார். அபிராமிபட்டர் சிறுவயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார். அவர் தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் உள்ளத்தில் அபிராமி அன்னையின் மீது தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன், கிறுக்கன் என்று அவரை கேலியும் கிண்டலும் செய்தனர். யோக ...

எல்லாம் தனியார் மையம்.. பட்ஜெட்டின் சிறப்பு

 நாட்டு பட்ஜெட் வீட்டுக்கு என்ன செய்து விடும்.. இதை யோசிக்காத மக்களே 80 சதவிகிதம்...இன்று எழுந்தோமா... பணிகளை செவ்வனே செய்தோமா..இரவு படுக்கைக்கு சென்றோமா.. என காலம் ஓட்டுகிறார்கள்... அவர்களுக்கு என்ன தெரியும் அல்லது அவர்கள் எதிர்பார்ப்பு தான் என்ன...?? இன்றைய நவீன பட்ஜெட்டில்.. நிறைய அரசு துறைகள் தனியார்மயம் ஆக்கப்பட்டிருக்கிறது... விளைவுகள் சுபமாய்.. இருந்தால்.. நாட்டு மக்கள் அனைவருக்கும்.. தனியார்மயம் ஆக்க பட்ட..நிறுவன பங்குகளை வாங்க முடியுமா..??..chance..ஏ.. இல்லை.. நமக்கு எல்லா வசதிகளும் சிரமமின்றி கிடைத்தால் போதும்.. இன்றைய பட்ஜெட் தாக்கலின whatsapp.. பதிவை நோக்குங்கள்... மாண்புமிகு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 01.02.2021 அறிவித்த பட்ஜெடின்  முக்கிய அம்சங்களில் சில வருமாறு: * சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் * மதுரையில் தொழில் வழித்தடம். * தமிழகத்தில் 3,500 கி.மீ. புதிய சாலை அமைக்கப்படும். * தமிழக சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி. *தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா. * மதுர...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

 🇮🇳 *பெண்ணிற்கு நம் முன்னோர்கள் தந்த அர்த்தநாரீஸ்வரர்.. சிவன் பாதி  சக்தி பாதி.. சேர்ந்த நிலையே.. இது.. சிவன் இல்லையேல் சக்தி இல்லை.. சக்தி இன்றி.. சிவன்..வெறும் சவமே..! பெண்ணின்றி ஆணின் வாழ்க்கை வெறும் பூஜ்யம்.. அதே போல தான்.. திருமணம் ஆகாத கன்னி பெண் வாழ்க்கை... அவளை முதிர்க்கண்ணி..ஆக்கிவிடும்..இந்த மகளிர் சமூகம்.. 1.திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது* 2.மனைவி இல்லாதவன் யாகம் செய்யக்கூடாது* 3.மனைவி இல்லாதவன் கும்பாபிஷேகம் போன்ற யாகங்களில் பங்கேற்க தகுதி கிடையாது* 4.மனைவி இல்லாதவன் தானம் செய்ய முடியாது* 5.மனைவி இன்றி செய்யும் தானம் பலன் தராது* 6.மனைவி இல்லாதவன் பித்ரு கடன்களை செய்ய வாய்ப்பற்றவன்* 7.மனைவி இல்லாதவன் கோயில் உள்ளே சென்று ஸ்வாமியை  பூஜை செய்ய அருகதை அற்றவன்* 8.மனைவி இல்லாதவன் பஞ்சாயத்தில் தலைமையாக உட்காரும் தகுதி இல்லாதவன்* 9.மனைவி இல்லாதவன் நேரில் வந்தால் சகுனப் பிழை என பொருள்..இதுவே ஒத்தை பிராமணன் என திரிக்கப்பட்டது* 10.மனைவி இல்லாதவனுக்கு ஆகமங்களின்படி ஆச்சார்ய தீக்ஷை கிடையாது* 11.மனைவி இல்லாதவனுக்கு கும்ப மரியாதை கிடையாது* 12....