Posts

Showing posts from October, 2024

சிந்திக்க வேண்டிய விஷயங்கள் -1 (21-10-24 வாட்சப் பகிர்வு)

*காலை நேர சிந்தனை* ( 21.10.2024) பன் நெடுங்காலமாகவே மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு விமோசனம் உண்டா ? அவனுடைய அறியாமை இருளைப் போக்கிட முடியுமா ?  அவனது அடிமை விலங்குகளை உடைத்தெறிய முடியுமா ?  எனப் பலவாறு சிந்தித்து அதற்கான வழிகை தேடத் தொடங்கிய அறிஞர் இங்கர்சாலின் கருத்துக்களில் இருந்து.. 01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமாந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும். 02. ஒவ்வொரு தொட்டிலும் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறது, ஒவ்வொரு சவப்பெட்டியும் எங்கே போகிறேன் என்று கேட்கிறது. 03. எந்தப் பெண்ணை மனப்பூர்வமாக காதலிக்கிறாயோ அவள் என்றும் உன் கண்களுக்கு குமரியாக தோன்றுவாள். 04. எவ்வித நோக்கமும் இன்றி மனிதனை இயற்கை படைக்கிறது, அதுபோலவே எவ்வித நோக்கமும் இன்றியே அழிக்கவும் செய்கிறது. 05. தான் ஏமாற்றப்படுகிறேன் என்ற உண்மையை எவன் கண்டு பிடிக்கிறானோ அப்போதே அவன் இருட்டில் ஒரு விளக்கை ஏற்றியவனாகின்றான். 06. பெற்ற சுதந்திரத்தை மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க...