T V.. serials.. today's trend..1

 

டி வி… தொடர்கள்..1

வாழ்க்கையில் ஓரு ..அருமையான விஷயம் ..நம் குடும்பத்தாருடன் வீட்டில் நேரம் செலவழிப்பது..அந்த தருணத்தில் டி வி யில்.. சீரியல் ஆரம்பித்து விடும்…

நமக்கும் பொழுது போகவில்லை என்பதற்காக, மனைவி மகளுடன் அமர்ந்து அந்த சீரியலை நாமும் பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்..அப்பொழுது mind voice யில் ஒரு slot வரும்.. முப்பது வருஷத்துக்கு முன்னாடி..அம்மாவுடன் அமர்ந்து.. சீரியல் பார்க்க நமக்கு மனம் ஒப்பாது..ஏதோ பார்க்க கூடாத.. விஷயங்களை பார்ப்பதை போல மனசு கடுப்பாகும்…இன்றைய சீரியல்கள்.. மிக பிரமாண்டமான முறையில்.. சினிமா போல தயாரிக்கப்படுவது.. மிகச்சிறப்பு சரிதான்..குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு.. சீரியல்கள் மிக சூப்பர்…தான்…எனினும் வேறு சில விஷயங்கள்.. தற்போது serial…களின் கதை ஓட்டத்தை.. கெடுத்து விடுகிறது.. அது …அந்த தொடர்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை..TRP மதிப்பீடு..! 30 வருடங்களுக்கு முன்னால் கூட அது (TRP) இருந்தது..ஆனால் அன்று போட்டி கிடையாது.. இன்று ..தொலைக்காட்சி நிறுவனங்கள் விளம்பர வருமானத்தை.. நம்பியே காலம் தள்ளுகிறது…. அப்படி இருக்க.. ஏன் இந்த சீரியல்களில் உயிரோட்டம் இல்லை.. ஏதோ செயற்கை முறையில் கதை நகர்வது போல இருக்கு.. இது ஏன்??..அடுத்த போஸ்டிங்கில் தொடரும்



Comments

Popular posts from this blog

விட்டு கொடுத்தலே.. நிஜமான வெற்றி!💐💐💐

சிவ புண்ணியம்.. செய்ய.. வாழ்க்கை சிறக்கும்.

சிந்திக்க வேண்டிய விஷயங்கள் -1 (21-10-24 வாட்சப் பகிர்வு)